Pages

Tuesday, January 22, 2013

குறிப்புகள்


1. இஞ்சியை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி பிரிட்ஜில் வையுங்கள். தண்ணீரை ரெண்டு நாள்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே வாருங்கள்.  நீங்கள் வைத்திருக்கும் இஞ்சி நீண்ட நாள்  கெடாமல் இருக்கும்.

2. ஒரு   டப்பாவில் சிறிதளவு சர்க்கரை தூவி அதனுள் பிஸ்கட் வையுங்கள். பிஸ்கட் நீண்ட  கெடாமல் இருக்கும்.

3. சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னாள்  சிறிதளவு உப்பை தடவிக்  கொண்டால்  கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

4. ஸ்கெட்ச் பென் கறையை போக்க  அசிடோன் (  நெயில் பாலிஷ் ரிமூவர்) தடவினால் போதும். கறை  மறைந்து விடும் .

5.வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணமல் போய்விடும்.

6.உருளைக்  வாய்த்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.

7. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன்  எடுத்து விட்டு பேப்பரில் சுற்றி பிரிட்ஜில் வையுங்கள்  நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

8. அரிசி மற்றும் காய் கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

9. ஒரு கைப்பிடி கல் உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி மூட்டைக்கு   அருகில்  வைத்தால்  பூச்சிகள் எதுவும் அரிசியை அண்டாது.

10. மிதியடிக்கு அடியில் அதே அளவில்  பழைய நியூஸ் பேப்பரை வைத்து விட்டால், மிதியடிகள் அழுக்கு  எல்லாம் பேப்பரில் போய்விடும்.

11.பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.

12.காலிப்ளவேர் சமைக்கும் போது  ஒரு துளி பால் சேர்த்தால் பூ   போன்ற வெள்ளை கலர் மாறாமல்  இருக்கும். பச்சை வாடையும் வராது.

13.இட்லி மாவு  புளிக்காமல் இருக்க,வெற்றிலையை காம்பு கில்லாமல் மாவுப் பாத்திரத்தில்   குப்புற இருப்பது போல ரெண்டு வெற்றிலையைப் போடவும். ரெண்டு நாட்களுக்கு பொங்காமலும், புளிக்காமலும் இருக்கும்.

14. வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டிபோலாகிவிடும் . இப்படி ஆகாமளிருக்க பெருங்காய டப்பாவில் பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் போடுங்கள். பெருங்காயம் அப்படியே இளகி பஞ்சு போல் ஆகிவிடும்.

15.ரவா, மைதா, அரிசி ஆகியவற்றில் பூச்சி புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பு தட்டி இந்த பொருள்கள் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் தலை காட்டாது

16.பிரிட்ஜே, ஸ்டோர் ரூம், பாத்ரூம், என கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்ப்ரின் மாத்திரைகளை அங்கங்கு வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.

17.காய்ந்த எலுமிச்சை தோளை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சி வராது.

18.புளித்த மாவாக இருந்தால் கடுகு, பெருங்காயத்தைப் பொரித்து கொட்டி மல்லி, கருவேப்பில்லை, ஒரு ஸ்பூன் சர்க்கரை, கொஞ்சம் உப்பு சேர்த்து வெது வெதுப்பான வெந்நீரில் ரவா மைதா கொஞ்சம் சேருங்கள். வெங்காயம் மிளகாய் சேர்த்து தோசை வார்த்தல்  தெரியாது . தோசையும் சுவையாக இருக்கும்

19.வெள்ளை துணிகளில் எம்ப்ரொஇடர்ய் செய்யும் பொழுது அழுக்காகாமல் இருக்க கைகளில் முகம் பூசும்  பௌடரை பூசி இருந்தால் அழுக்காகது.

20.சமையல் அறையில் எலுமிச்சை பழச்சாற்றினால் ஏற்படும் வெள்ளை கரையை சிறிது வெண்ணையை அதில் தடவி சில மணி நேரம் கழித்து துடைத்தால் தரை பளிச்சென்று இருக்கும்.

No comments:

Post a Comment