Pages

Tuesday, January 22, 2013

கண்


 கண் எரிச்சல் நீங்க :

அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும், கண் ஒளிபெறும்.

கண் பிரகாசம் அடைய :

தூது வளைகாய் ஊறுகாய் செய்து சாப்பிட கண் ஒளிபெறும்.
கண் நோய் : முருங்கை கீரை சாப்பிட கண் நோய் தீரும்.

கரு  வளையம் : கண்ணுக்கு கீழ் உள்ள கரு வளையம் நீங்க உருளை கிழங்கை நன்றாக அரைத்து கண்களில் பூச கருவளையம் மறைந்து கண்கள் அழகுபெறும்.

கண் அயர்வு :  நாம் வெகு நேரம் கணினி அல்லது தொலைகாட்சி பார்க்கும் பொழுது கண்கள் அயர்ந்து விடும் அப்பொழுது சிறிது நேரம் கண்களை மூடியோ, அல்லது பசுமையான செடி, கொடிகளையோ பார்த்தால்  கண்களுக்கு புத்துணர்வு கிடைக்கும்  

கண் குளிர்ச்சி அடைய : வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தலையில் தேய்த்து குளிக்க கண்கள் குளிர்ச்சி பெரும். சுருசுறுப்பாகவும்  இருக்கும் . 

கண் கட்டி மறைய : வெயில் காலங்களில் கண்களில் உண்டாகும் கட்டியை நாம் கை வைத்து பெரிதாக்கி விட கூட்டு அதில் நாமக்கட்டியை கண்ணில் படாமல் தடவ வேண்டும்.

யோகா : சிறு சிறு யோகா பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்களின் பவர் ஒரே நிலையில் இருக்கும்.

மேக்கப் : கண்களில் போடும் மேக்கப்பை  தூங்கும் முன் கண்டிப்பாக கலைத்து விட வேண்டும். குளிர்ந்த  நீரில் கண்களை கழுவுவது மிகவும் நல்லது. 

கண்ணாடி : வெயிலில் செல்பவர்கள் கூலிங்க்ளாஸ்  அணிந்து சென்றால் கண்களில் ஏற்படும் பாதிப்பு குறையும்.

தூக்கம் : தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம். கண்களுக்கு ஈரத்தன்மை தூக்கத்தில் மட்டுமே கிடைக்கும்.

வெளிச்சம் :  சரியான வெளிச்சத்தில் மட்டுமே நாம் புத்தகங்களை படிக்க வேண்டும்.

லென்ஸ் : பெண்கள்   ஹேர்ஸ்ப்ரே செய்யும் போது கண்களில் லென்ஸ் அணிய கூடாது. 

சத்துணவு : வைட்டமின் ஏ சத்துள்ள பொருள்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதாவது கீரை, காரட், பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்கறிகள், பால் மற்றும் பால் வகை பொருள்கள், மாமிசம் போன்றவற்றில் இந்த சத்து உள்ளது .

கண் இமை : கண்  இமை  மீது ஒரு ஈரத் துணியை  ஒத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.  

கருவளையம் :  பாதாம் பருப்பை பாலுடன் சேர்த்து அரைத்து கண்களை சுற்றி பேக்  போடுவதால் கருவளையம் மறையும் 

கண் மை : முடிந்த வரை கண் மை வீட்டில்  தயார் செய்வதே நல்லது. 

No comments:

Post a Comment