Pages

Tuesday, January 22, 2013

பிரியாணி


வெஜிடேபிள்  பிரியாணி

தேவையான பொருட்கள்  : பாசுமதி ரைஸ் - ஒரு ஆழாக்கு, நறுக்கிய  காரட், உருளைக்கிழங்கு - 2தலா , பச்சைப்பட்டாணி - 50 கிராம், புதினா கொத்தமல்லி - சிறிதளவு - 1/4   கப் , நறுக்கிய  வெங்காயம் தக்காளி - தலா 2, கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் , மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் , - மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பிரியாணி இலை , மராத்தி மொக்கு - தலா 2,   இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : எண்ணையில் பிரியாணி இலை , மராத்தி மொக்கு  தாளித்து வெங்காயம் , தக்காளி உட்பட எல்லா காய்கறிகளையும் பிறகு வதக்கவும். [பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள்,  கரம் மசாலா , உப்பு, தயிர்   எல்லாவற்றையும் விட்டு   மறுபடியும் வதக்கவும். 1இதில் 10 நிமிடம்  ஊற வைத்த  அரிசியையும் அரிசியையும் போட்டு வதக்கவும். பிறகு 11/2 ஆழாக்கு தண்ணீர்   விட்டு 2   விசில் வரும் வரை வேக விடவும். வெந்ததும் அரை மூடி லெமன் பிழிந்து புதினா கொத்தமல்லி தூவி
பரிமாறவும்.இதுதான் பாரம்பரிய வெஜிடேபில் பிரியாணி .

சைனீஸ் ப்ரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்  : பாசுமதி ரைஸ் - ஒரு ஆழாக்கு , நறுக்கிய காரட் - 2, குடை மிளகாய்  - 2, பெரிய வெங்காயம் - 1,  - பச்சைமிளகாய் - 2, வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், அஜினமோட்டோ - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை : அரிசி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு , களைந்து  உடனே  எடுத்து விடவும். பிறகு அரிசியை அரை வேக்காடாக வேக வைத்து வடித்து ஆற விடவும் . குக்கரில் எண்ணையை  வைத்து அதில் நறுக்க்ய காய்கறிகள் , வெங்காயம் அஜினமோட்டோ, உப்பு, மிளகுத்தூள் ஆகியவைகளை போட்டு நன்கு வதக்கவும். காய்கறிகள் வதங்கி வெந்ததும் பாதி வெந்த சாதத்தை போட்டு கலந்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை விடவும். அல்லது 5 நிமிடம் தம் போடவும்  .

தக்காளி காரட் புலாவ்

தேவையான பொருட்கள்  : பாசுமதி ரைஸ் - ஒரு ஆழாக்கு, தக்காளி - 1/4 கிலோ , கேரட் - 2, பூண்டு - 10 பல் , பட்டை, லவங்கம் - தலா 2, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் , மிளகாதூள் - 3/4 டீஸ்பூன் , பெரிய வெங்காயம் ௨, டால்டா - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை : குக்கரில் டால்டாவை காய வைத்து பட்டை லவங்கத்தை தாலியுங்கல். அதில் நறுக்கிய வெங்காயம், தக்காலி, கேரட், பூண்டு ஆகியவைகளைப் போட்டு நன்கு வதக்கவும். இதில் சிறிதளவு தண்ணீர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவைகளைச் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு 21/2 ஆழாக்கு தண்ணீர், களைந்து வைத்துள்ள அரிசி இரண்டையும் பொட்டு 2 விசில் வரும் வரை வேக விடவும்.

பிசிபேளாபாத்

நீளவாக்கில் நறுக்கிய 2 காரட் , 2 உருளைக்கிழங்கு , 2 முருங்கைக்காய் , 2 கத்திரிக்காய் , 250 கிராம் பச்சை பட்டாணி 100 கிராம் சாம்பார் வெங்காயம் எல்லாவற்றையும் தனியாக வேக வைக்கவும்

      5 காய்ந்த   மிளகாய், ஒரு டீஸ்பூன் தனியா - 1/4 கப் தேங்காய் துருவல், 2 பச்சை மிளகாய் , 1/2 டீஸ்பூன் மிளகு ஆகியவைகளை நெய்யில்  வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும் .

     3/4 ஆழாக்கு பாசுமதி ரைஸ், ஊற வைத்த 1/2 ஆழாக்கு துவரம் பருப்பு , 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  மூன்றையும் , 3 விசில் வரும் வரை வேக வைத்து,   மத்தால் மசிக்கவும்.

   எலுமிச்சை அளவு   புளியை கரைத்து கொதிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து கடுகு பட்டை லவங்கம்  கறிவேப்பிலை  நான்கையும் தாளிக்கவும் இதில் வெந்த காய்கறி  அரைத்த் மசாலா, புளிக்கரைசல்  குழைந்த சாதம் எல்லாவற்றையும் கலந்து சுடசுட  சாப்பிடுங்கள்.

No comments:

Post a Comment