Pages

Tuesday, January 22, 2013

குறிப்புகள் ஆயிரம்


16. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.

17. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு  புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

18. சமையல் பாத்திரத்தின் உள்ளே கரி பிடித்திருந்தால் வெந்நீரில் சிறிதளவு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு கரி பிடித்த பாத்திரத்தினுள் ஊற்றி சில நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். பாத்திரம் பளிச்சிடும்.

19. ஆரஞ்சு பழத்தோலை போடியாக்கி ரசத்துடன் சேர்த்துப் பாருங்கள் மனமும் சுவையும் கூடும் .

20. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை ) விட்டு குப்பை கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்

21. இஸ்திரி பேட்டியின் அடியில் உள்ள பிரவுன் கரையை போக்க கரையின் மேல் சமையல் எண்ணெயை தடவி அப்படியே ஆன் செய்து விடவும் சிறிது நேரம் கழித்து ஆப் செய்து ஈரத்துணியால் துடைத்தால் பிரவுன் கரை போய் விடும்.

22. வெள்ளை கேன்வாஸ்  ஷூக்களை நான்கு சொட்டு நீளம் சேர்த்து பாலிஷ் செய்தால் மஞ்சள் நிறம் மாறிபுதியது போல் ஆகும்.

23. வெள்ளைக் கலர் டெலிபோன் ஆளுக்கு பிடித்திருந்தால் நெயில் பாலிஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.

24. மிக்சியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்

25. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகொலனைத் தடவி பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை  தூக்கும்.

26. துடைப்பம் உபயோகப்படும் போது மேல், கீழ் வழியாக குச்சி   இருக்க,பழைய சாக்ஸை மேலே நுழைத்து கட்டிவிட்டால் பல காலம் துடைப்பம் உழைக்கும்

27. சிறிது டால்கம் பவுடரை ரப்பர் பேன்ட் வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வைத்தால் ரப்பர் பேன்ட் ஒன்றோடு ஒன்று ஒட்டாது

28. வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் முதல் நாள் இரவே பிரிட்ஜில் வைத்து மறுநாள் காலையில் நறுக்கும் பொது கண்ணீர் வராது: சுலபமாக உரிக்கலாம்.

29. ராக்கிக்கு  வண்ணக் கயிறு பட்டையை நிறைய வாங்கி கொளுப்படியின் பார்டரில் கலர் மாற்றி மாற்றியோ ஒரே கலரிலோ வாங்கி ஒட்டவும். பளபளப்பான ராக்கி கயிறு காற்றில் ஆடும் போதும் சுற்றும் போதும் நட்சத்திரம் வீட்டிற்குள் வந்தது போல் இருக்கும்.

30. துணி அயர்ன் செய்யும் பொது ஜரிகை உள்ள  சேலையாய் இருந்தால் உடம்பில் ஜரிகை படாமல் அயர்ன் செய்ய வேண்டும் . ஜரிகை மூலம் ஷாக் அடிக்க சான்சே உண்டு

No comments:

Post a Comment