Pages

Tuesday, January 22, 2013

புது குறிப்புகள்


1. வெள்ளிப் பாத்திரங்கள் உள்ள பையில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் வெள்ளி கருக்காது.

2. சமையல் மேடையில் காஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரெசின் இரெண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சென் பளிச்சென்று இருக்கும் .

3. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்பு கரையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப் பொலிவுடன் இருக்கும்

4. வாழைப்பழம் சீக்கிரம் கருத்து விடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் ப்ரெஷாக இருக்கும்.

5. பிரிட்ஜில் ஆப்பிள், காராட் இரெண்டையும் ஒரே கம்பார்ட்மென்ட்டில் வைக்காதீர்கள் ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒருவித வாயு காரட்டய் கசக்கச் செய்து விடும்.

6. பீன்ஸ் அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ்  சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்து விடும்.

7. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து  வெட்டினால் கண்கள் எரியாது

8. சமையல் செய்யும் போது அதிகமாக தண்ணீர் விட்டு காய்கறிகளை வேக வைக்கக் கூடாது. காய்கறிகளின் வைட்டமின் சத்துக்கள் காணாமல் போய் விடும். காய்கறியின் மணமும் போய் விடும்.

9. உணவில் அதிக அளவு உப்பு சேர்த்து விட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்க உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்து விடும்.

10. பச்சை நிற காய்கறிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நிறம் மாறிவிடும். இதனைத் தவிர்க்க அந்த காய்கறிகளின் மீது எலுமிச்சை பலச் சாற்றை வாற்றினால் சில நாட்கள் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.

11. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும் , பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை   துடைத்து விட்டால், மேஜை பபப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது .

12. காய்ந்த மிளகாயை வருக்கும் போது, வரும் நெடி நம்மை கஷ்டபடுத்தும். அதை தவிர்க்க மிளகாயுடன் சிறிது உப்பு போட்டு வறுத்தால் இருமல் நெடி ஏற்படாது.

13. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான  நனைத்து மரச் சாமான்ம்களை  வார்னிஷ் செய்தது  போல இருக்கும்.

14. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் இரும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு.வராது

15. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு  மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

No comments:

Post a Comment