Pages

Tuesday, January 22, 2013

அவசர சமையல் ஐந்து


அவசர ரசம்

ரசப்பொடி : மிளகு சீரகம் தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். 100 கிராம் காய்ந்த மிளகாய், 100 கிராம் க.பருப்பு 5 கிராம் கட்டிப் பெருங்காயம், ஒரு கைப்பிடி கறிவேப்பில்லை எடுத்துக் கொண்டு அனைத்தையும் டிரையாக வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். இப்பொடியை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

தேவையானவை : ரசப்பொடி     - ஒரு ஸ்பூன்
                 புளிபேஸ்ட்  - ஒரு டீஸ்பூன்
                 தக்காளி பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்            
                  எண்ணெய் கடுகு - தாளிக்க            
                 ம தூள் - 1/4 டீஸ்பூன்
                 உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை தேவையான அளவு.

செய்முறை : ஒரு டம்ளர் தண்ணீரில் ரசப்பொடி, புலி பேஸ்ட், தக்காளி பேஸ்ட் கரைத்து கொள்ளவும். பின் அடுப்பில் வைத்து மஞ்சள் தூள், உப்பு  போட்டு கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் மல்லி கறிவேப்பிலை தூவி இறக்கி, கடுகு தாளித்துக் கொட்டவும். வேண்டுமானா கொதிக்கும் போது 2 பூண்டுப் பல் தட்டிப் போடவும்.
                                           
அவசர சாம்பார்

சாம்பார் பொடி : ஒரு ஆழாக்கு து.பருப்பு, 2 கைப்பிடி காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, 5 கிராம் கட்டிப் பெருங்காயம், 2 டீஸ்பூன்   தனியா இவைகளை வறுத்து அரைத்து வைத்துக் கொண்டால் சாம்பார் பொடிதயார் . ஒரு மாதம் வரை தாங்கும்

தேவையானவை : தேவையான காய் - 100 கிராம், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன். ம. தூள் - 1/4டீஸ்பூன். புலி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன் , உப்பு  கறிவேப்பிலை தேவையான அளவு, கடுகு, எண்ணெய் - தாளிக்க.

செய்முறை :     தேவையான காயை முதல்நாளே சுத்தம் செய்து கட் செய்து பிரிட்ஜில் வைக்கவும். மறுநாள் காயை ப்ரசர் குக்கரில் வேக வைத்து விட்டு வாணலியில் கடுகு  தாளித்து ஒரு டம்ளர்  தண்ணீர் விடவும் அதில் புளிபேஸ்ட் சாம்பார்பொடி, ம.தூள், உப்பு போட்டு ஓரூ கொதி வந்தவுடன் வேகவைத்த காய், கொத்துமல்லி கறிவேப்பிலை தூவி இறக்கவும் காய் வேண்டாம் என்றால் தக்காளி மட்டுமே சேர்த்தும் செய்யலாம்.

அவசர குருமா

குருமா பொடி : ஒரு கைப்பிடி மிளகு, 2 கைப்பிடி தனியா, தலா 5 கிராம் பட்டை லவங்கம் ம.தூள் சேரத்து வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும் .

தேவையானவை:  குருமா மசாலா போடி - ஒரு டீஸ்பூன், பனீர் - 50 கிராம், ஸ்டார் செய்த தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், போட்டுக் கடலை - ஒரு டீஸ்பூன், தக்காளி பேஸ்ட் - 2 டம்ளர் , உப்பு, எண்ணெய்  - தேவையான அளவு .

செய்முறை : வாணலியில் எண்ணெய்விட்டு , பனீர் துண்டுகளைப் பொரிக்கவு பின் தண்ணீர் விட்டு தக்காளி பேஸ்ட், குருமா பொடியைப் போடவும். தேங்காய் துருவல், போட்டுக் கடலை இரண்டையும் மிக்சியில் அரைத்து அத்துடன் கலந்து உப்புப்போட்டு கிரேவி திக்கானதும் இறக்கவும்.



அவசர வெஜிடேபிள் ரைஸ்

பிரியாணிப் பொடி:   மிளகாய் வற்றல் 2 கைப்பிடி, தனியா ஒரு கைப்பிடி, ம.தூள் 5 கிராம், இவைகளை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இதனை இரண்டு வாரம் வரை பயன்படுத்தலாம்.

தேவையானவை : ரைசுக்கு தேவையான காய்கறிகள் - 150 கிராம், அரிசி - ஒரு டம்ளர், கரம் மசாலா -  ஒரு டீஸ்பூன் , சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன் , இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன் , எண்ணெய் கடுகு , கறிவேப்பிலை - தாளிக்க, பிரியாணிப் பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : காய்கறிகளை முதல்நாளே கட்செய்து வைத்துக் கொள்ளவும். மறுநாள் அடுப்பில் காய்கறிகளை வேகவைக்கவும் மறு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும் அதற்குள் காய்கறி அரை வேக்காடு வெந்திருக்கும் அந்தக் காயை எடுத்து இத்துடன் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் அரிசியையும் கொட்டி வதக்கவும் பின் 2 டம்ளர் தண்ணீர் விட்டு கரம் மசாலா, பிரியாணிப் போடி, சாம்பார் போடி, உப்பு போட்டு பிரஷர் குக் செய்யவும் 5 நிமிடத்தில் விசில் வரும் இறக்கி லெமன் ஜூஸ் விட்டுக் கிளறி பரிமாறவும்.

அவசர பனீர்  ரைஸ்

கரம் மசாலா : தலா 50 கிராம் பட்டை, லவங்கம் அன்னாசிப் பூ, 3  பிரியாணி இலை, தலா 10  சோம்பு சீரகம் இவைகளை டிரையாக வறுத்து ப பொடித்துக் கொண்டால் கரம்மசால ரெடி. ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்

தேவையானவை :  சாதம் ஒரு கப்,  பனீர் - அரை கப் , கரம் மசாலா - ஒரு டீஸ்பூன் , உப்பு, எண்ணெய் , லைம் ஜூஸ் - தேவையான அளவு.

செய்முறை :  சாதத்தை முதல் நாளே எடுத்து பிரிட்ஜில் வைக்கவும். மறுநாள் வாணலியில் எண்ணெய்விட்டு பனீரை வதக்கவும். இத்துடன்  சாதத்தை கொட்டி கரம் மசாலா, உப்பு போட்டுக் கிளறவும். பின்னர் இறக்கி லைம் ஜூஸ் 5 சொட்டுக்கள் விட்டுக் கிளறி பரிமாறவும்.

No comments:

Post a Comment